Written by Naveen » Updated on: June 17th, 2025
20 ஜூலை 2024: உத்தவ் தாக்கரே தாராவி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு (DRP) எதிராகக் குற்றச்சாட்டுகளை அடுக்கி தலைப்பு செய்தியாகினார். அவர் மீண்டும் முதலமைச்சரானால் அதை ரத்து செய்வதாகக் கூறினார். இதற்கு பதிலடியாக, தற்போது சிவசேனா - ஷிண்டே பிரிவினர் தரப்பிலிருந்து மூத்த மகாராஷ்டிர அரசியல் தலைவரான சஞ்சய் நிருபம் சில வலுவான கேள்விகளை எழுப்பியுள்ளார். ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி., ஆகிய இரண்டிலும் பணியாற்றிய நிருபம், தாராவி மக்களின் எதிர்காலத்துடன், தாக்கரே மற்றும் காங்கிரஸ் கட்சி, கேவலமான அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.
அவருடைய விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பின் சில முக்கிய குறிப்புகள் இதோ:
1. தாராவி அரசியல்
தாராவி மக்கள் அனைவருக்கும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுபிக்கப்பட்ட வீடுகள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதில் சிவசேனா-ஷிண்டே பிரிவினர் உறுதியாக இருப்பதாக நிருபம் கூறினார். காங்கிரஸ் மற்றும் சிவசேனா (UBT) கட்சி தலைவர்களான வர்ஷா கைக்குவாடு மற்றும் உத்தவ் தாக்கரே அரசியல் காரணங்களுக்காக தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார். இது 10 லட்சம் தாராவி மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்றும் கூறினார்.
2. தாக்கரேவின் எதிர்ப்பும் அதற்கான நேரமும்
மகாராஷ்ட்ர மாநில தேர்தல் நெருங்கும் நேரத்தில் உத்தவ் தாக்கரே தாராவி மக்கள் குறித்து கவலைக் கொள்வதாக நிருபம் சுட்டிக்காட்டினார்.
தாக்கரேவின் இந்த பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிதி குறித்த உள்நோக்கங்களுக்காகவே என பகீரங்கமாக கூறினார். அதானி மீது இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டு வைப்பது அவரிடம் இருந்து நிதிகளைப் பெறவே என்றும், தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் கௌதம் அதானியிடம் இருந்து நிதி பெற்றிருந்தால் அதை வெளிப்படுத்துமாறும் தாக்கரேவுக்கு சவால் விடுத்தார்.
3. தகுதி மற்றும் தகுதியின்மை சிக்கல்கள்
குடிசை மாற்று வாரிய புணரமைப்பு திட்டத்தின் கீழ் தகுதியுடைய குடியிருப்பாளர்களுக்கு மட்டுமின்றி, தகுதியற்றவர்களுக்கும் வீடு வழங்குவதற்கான தனித்துவமான சில விதிமுறைகள் முதன்முறையாக தாராவி மறுசீரமைப்பு திட்டத்தில் மட்டுமே நடப்பதாக நிருபம் எடுத்துரைத்தார்.
4. முந்தைய டெண்டரை ரத்து செய்த தாக்கரே
2020 அக்டோபரில் செக்லிங்க் டெக்னாலஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட முந்தைய டெண்டரை ரத்து செய்தவர் தாக்கரே தான் என்று நிருபம் தாக்கரேயின் இரட்டை வேடத்தை சுட்டிக் காட்டினார். அவ்வாறு செக்லிங்க் டெக்னாலஜியின் டெண்டரை ரத்து செய்த போது காங்கிரஸ் ஏன் மௌனமாக இருந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
5. தாக்கரேவின் புதிய டெண்டர்
தற்போதைய சிவசேனா-பாஜக-என்சிபி கூட்டணியின் கீழ் புதிய டெண்டர் விதிமுறைகள் தாக்கரேவின் ஆட்சிக்காலத்தில் தயாரிக்கப்பட்டதுதான் என்று நிருபம் கூறினார். தாக்கரேவின் தற்போதைய கோரிக்கையான 500 சதுர அடி வீடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார், அவர் முதல்வர் பதவியில் இருந்தபோது உருவாக்கிய டெண்டரில் தாக்கரேவின் தற்போதைய கோரிக்கையான 500 சதுர அடி பரப்பளவு வீடுகள் குறித்து ஏன் எழுதப்படவில்லை என்றும் 350 சதுர அடிபரப்பளவு என்று ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது என நிருபம் கேள்வி எழுப்பினார்.
6. TDR சர்ச்சை
மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமை (TDR) தொடர்பான சர்ச்சை குறித்தும் நிருபம் பேசியிருந்தார். 2018-ல் தாக்கரேவின் கூட்டாச்சி காலத்தில் பெருநகரமும்பை மாநகராட்சி (B.M.C) வெளியிட்ட Development Plan 2034-ன் படி, கிடைத்துள்ள TDR-ஐ மும்பை நகரில் எங்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தி கொள்ளலாம் அல்லது வேறு ஒரு டெவெலப்பர்க்கு விற்று கொள்ளலாம். இந்த ஆர்டர் மும்பை உச்ச நீதிமன்றத்தின் TDR சமந்தப்பட்ட தீர்ப்பை ரத்து செய்தது. தற்போது DRP டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள TDR உட்பிரிவு தாக்கரேயின் பதவி காலத்தில் சேர்க்கப்பட்ட விதி என்று விளக்கினார். அப்போது விதியை அமல்படுத்தியவர் இப்போது அதை எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
7. புனல் முறை
விமான நிலையங்களுக்கு அருகில் பயன்படுத்தப்படும் புனல் முறையை நிருபம் விளக்கினார். ஒவ்வொரு கட்டடம் கட்டுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ் (FSI) என்னும் ஒப்புதல் பெறவேண்டும். ஆனால் விமான நிலையத்தின் விதிமுறைகளின் படி மாநகராட்சி மற்றும் மாநில அரசாங்கம் அனுமதிக்கப்பட்ட FSI மற்றும் TDRஐ அங்கீகரிக்க புனல் முறையைப் பின்பற்ற வேண்டும். அங்கு கட்டுமான நிறுவனங்கள் பயன்படுத்த முடியாத FSI அனைத்தும் மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமையாக (TDR) மாறும்.
இந்த TDRக்காண உரிமையாளர் இதை விற்கலாம் அல்லது தனது மற்ற ப்ரொஜெக்ட்டில் பயன்படுத்திக்கொள்ளலாம். இது போன்ற பெரிய ப்ரொஜெக்ட்டுகளில் TDR இல்லாமல் டெவெலப் செய்யவது சாத்தியம் இல்லை என்று விளக்கினார்.
8. நிதி நிலைத்தன்மை
TDR-ஐ சேர்ப்பதன் மூலம் நிதி ரீதியாக தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை எந்த ஒரு இடையூறுமின்றி வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்று நிருபம் வலியுறுத்தினார். முதல் 15 ஆண்டுகளுக்கு எந்த வருமானமும் இல்லாமல் ₹23,000 கோடி முதலீட்டை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது என்பதையும் அதை முழுமையாக டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனமான அதானி குழுமமே முதலீடு செய்யும் என்றும் விளக்கினார்.
9. தாராவி மக்களின் மறுவாழ்வு மற்றும் நிலத் தேவை
தாராவியில் 2000-திற்கு முன்பே குடியேறிய 60,000 குடும்பங்களுக்கும், 2000திற்கு பின்பு குடியேறிய 1,20,000 குடும்பங்களுக்கும் மறுவாழ்வு தேவைப்படுவதாக நிருபம் தெரிவித்தார். பின்னர் தாராவியில் உள்ள நிலங்கள் இல்லாது மேலும் சேர்க்கப்பட்ட 540 ஏக்கரில் 2000திற்கு பின்பு குடியேறிய 1,20,000 குடும்பங்களின் மறுவாழ்வுக்காகவே தவிர, அதானிக்காக அல்ல என்று விளக்கினார். மேலும் இந்த தாராவி மறுசீரமைப்பு திட்டம் தாராவியை சேரியிலிருந்து நவீன நகரமாக மாற்றும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சஞ்சய் நிருபமின் இந்த விளக்கம் மற்றும் கேள்விகள், தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தைச் சுற்றியுள்ள அரசியல் சிக்கலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தாக்கரேவின் குற்றச்சாட்டுகளுக்கு சரியான விளக்கத்தை எடுத்துரைப்பதன் மூலம், மஹாராஷ்ட்ரா அரசாங்கம் தாராவியை மேம்படுத்துவதை தனது இலக்காக வைத்திருப்பது தெரிகிறது.
தாராவி மக்களின் எதிர்காலம் கருதி இந்த மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளின் வேர்களை ஆராய்ந்து அவர்களின் உள்நோக்கம் என்ன என்று தெரிந்து செயல்படுவது மிகவும் அவசியம்.
Note: IndiBlogHub features both user-submitted and editorial content. We do not verify third-party contributions. Read our Disclaimer and Privacy Policyfor details.
Copyright © 2019-2025 IndiBlogHub.com. All rights reserved. Hosted on DigitalOcean for fast, reliable performance.